1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2025 (12:19 IST)

”டேய் சங்ககிரி ராஜ்குமார்.. நீ எந்த ஊருடா?” போனில் மிரட்டும் நாதக தொண்டர்கள்! - சீமான் போட்டோஷாப் விவகாரம்!

Sankakiri Rajkumar

சீமான் பிரபாகரனுடன் இருக்கும் போட்டோவை எடிட் செய்தது நான் தான் என சமீபத்தில் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய நிலையில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஏற்கனவே சீமான் இலங்கையில் பிரபாகரனை ஈழந்து போரின் போது சென்று சந்தித்து ஆமைக்கறி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்ததாக பேசியதை பல தரப்பிலிருந்தும் கேலி செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கட்சியிலிருந்து விலகிய இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் நான் தான் சீமான் பிரபாகரனோடு உள்ளது போன்ற போட்டோவை எடிட் செய்தேன் என கூறியதால் மேலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதுடன், பல கட்சியினர் இதுகுறித்து சீமானை கிண்டல் செய்து வருகின்றனர்.

 

இதனால் கடுப்பான நாம் தமிழர் கட்சியினர், சங்ககிரி ராஜ்குமாரை போனில் அழைத்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சங்ககிரி ராஜ்குமார் “கடந்த நான்கு ஐந்து நாட்களாக என் அலைபேசிக்கு நேரடியாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். 

 

அழைப்பை எடுத்தால் வீட்டில் இருக்கும் பெண்களை வசை பாடுகிறீர்கள் அல்லது மிரட்டுகிறீர்கள். அதற்காக அச்சப்பட்டு கொண்டு இந்த பதிவை எழுதவில்லை. 

 

கசப்பை சுவைத்த உங்கள் நாவிற்கு இந்த ஆபாச வார்த்தைகள் தான் ஆறுதல் தரும் என்றால் பேசிவிட்டு போங்கள். 

 

இடையிடையே டேய்..சங்ககிரி ராஜ்குமார் நீ எந்த ஊர் காரன்டா என்று கேட்டு சிரிப்பும் மூட்டுகிறீர்கள். உங்கள் அச்சுறுத்தலுக்கோ.. ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை. 

 

உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். எனக்கு அழைப்பதற்கு முன்பாக உங்கள் முகப்பு படமாக வைத்திருக்கும் தலைவர் பிரபாகரன் படத்தை நீக்கிவிட்டாவது அழையுங்கள். 

 

வீரம் நிறைந்த அவர் புகைப்படத்தை கண்களில் பார்த்துக் கொண்டே, காதுகளில் உங்கள் அழுக்கு வார்த்தைகளை கேட்பதற்கு அருவருப்பாக இருக்கிறது.

 

உலகே கண்டு வியந்த ஒரு ஒப்பற்ற தலைவரை முடிந்த வரை இழிவு செய்து விட்டீர்கள் இனியேனும் விட்டு விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K