தக்காளி கூடைக்குள் வெடிகுண்டுகள்: சேலத்தில் இருவர் கைது!
தக்காளி கூடைக்குள் வெடிகுண்டுகள்: சேலத்தில் இருவர் கைது!
தக்காளி கூடைக்குள் வெடிகுண்டுகள் வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சேலத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு அனுமதியின்றி வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ரோந்து செய்ததில் வாலையாறு என்ற பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த தக்காளி லோடு ஏற்றி வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்
அப்போது தக்காளி கூடைக்கு இடையில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அவருடன் வந்த இன்னொருவர் என இருவரை போலீசார் கைது செய்தனர்
விசாரணையில் டிரைவரின் பெயர் பிரபு என்றும் இன்னொருவர் பெயர் ரவி என்றும் தெரியவந்தது. கேரள மாநிலத்துக்கு இந்த ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்கள் கடத்தப்பட்டது என விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்