புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (11:20 IST)

திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்: யாருக்கு பதில் யார்?

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்பட அனைத்து கட்சிகளும் கிட்டத்தட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு பிரச்சாரத்தை தொடங்கி விட்டன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் சிறு திருத்தம் ஏற்பட்டுள்ளது
 
சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: சேலம் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட திருமதி ஜீவா ஸ்டாலின் அவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தத்ற்கு மாறாக தற்போது சின்னத்துரை அவர்கள் ஆத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது