வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (23:59 IST)

அடுத்த சில நாள்களில் ரஷ்யா யுக்ரேனைத் தாக்க வாய்ப்பு: ஜோ பைடன்

இன்னும் சில நாள்களில் ரஷ்யா யுக்ரேன் மீது தாக்குதல் நடத்துவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
 
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யா யுக்ரேனைத் தாக்குவதற்கான ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
 
யுக்ரேன் எல்லையில் ரஷ்யா படைகளைத் தொடர்ந்து குவித்து வருவதைச் சுட்டிக்காட்டி அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
 
எனினும் பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வுக்கு இன்னும் வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பேசுவதற்கு உடனடியான திட்டம் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
 
இதனிடையே யுக்ரேனைத் தாக்கும் திட்டம் ஏதும் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறிவருகிறது.