1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 ஜூலை 2021 (11:20 IST)

தனியார் பள்ளிகள் எப்படி கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்?

தனியார் பள்ளிகள் எப்படி கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற விவரங்களை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார். 

 
75% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், தனியார் பள்ளிகள் எப்படி கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற விவரங்களை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்.
 
அதனப்டி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தனியார் பள்ளிகளில் 40% கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டதும் 2 மாதத்திற்குள் 35% கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம். எஞ்சிய 25% கட்டணத்தை எப்படி வசூல் செய்வது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.