வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (16:38 IST)

பெரியார் சிலையை அகற்றினால் பாஜக ஆட்சி தூக்கி எறியப்படும்: ஆர்.எஸ்.பாரதி

பெரியார் சிலையை அகற்றினால் டெல்லியில் உள்ள பாஜக அரசு தூக்கி எறியப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார் 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அளித்த பேட்டியின் போது ஸ்ரீரங்கம் கோவில் கடவுள் மறுப்பு வாசகங்களுடன் இருக்கும் பெரியார் சிலை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நீக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் 
 
கடந்த 1967ஆம் ஆண்டு வைக்கப்பட்ட இந்த சிலை அகற்றப்படும் என்ற அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
இதுகுறித்து திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி, தம்ழிநாட்டில் பெரியார் சிலை அகற்றப்பட்டால் மத்தியில் பாஜக ஆட்சியும் அகற்றப்படும் என்று கூறினார்.
 
மேலும்  திராவிடர் இயக்க எழுத்தாளர் வே.மதிமாறன்,   விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட பலர் அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்,
 
Edited by Mahendran