வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2020 (08:53 IST)

நம்மக்கிட்டயே கதையை மாத்துறீங்களே! – ஜெயக்குமார் பதிலுக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

திமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் பேசியதற்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்போரூர் நில தகராறில் ஏற்பட்ட வன்முறை குறித்து திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எம்.எல்.ஏ இதயவர்மன் வைத்திருந்த துப்பாக்கி லைசென்ஸ் இல்லாதது என தெரிய வந்த நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “திமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு எதிர்ப்ப்ய் தெரிவித்துள்ள ஆர்.எஸ்.பாரதி “திருப்போரூர் சம்பவத்தில் எம்.எல்.ஏ இதயவர்மன் தனது நலனுக்காக செயல்பட்டது போல அமைச்சர் பொய்யாக சித்தரிக்க முயல்கிறார். கோவில் நிலையம் தனியாருக்கு விற்கப்படுவதை தடுக்கவே இதயவர்மன் சென்றார்” என கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதி “நிலத்தகராறு நடைபெற்ற இடத்தில் 50க்கும் மேற்பட்ட ரௌடிகளை காவல்துறை எப்படி அனுமதித்தது? நிலத்தை அபகரிக்க முயன்றவர் அதிமுகவின் பினாமி என்பதை மறைத்து விட்டு திமுக மீது பழிபோடுகின்றனர்” என கூறியுள்ளார்.