ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: திங்கள், 4 ஜூலை 2016 (10:52 IST)

ரூ 570 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்து ரூ.570 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 


ரூ.570 கோடி பணம் கைப்பற்றப்பட்டு சில நாட்களுக்கு பின்னரே எஸ்பிஐ வங்கி அந்த பணம் தங்களுடையது என உரிமை கோரியது. ஐதராபாத்தில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறினர்.

இதனையடுத்து இந்த கைப்பற்றப்பட்ட பணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழும்பியது, இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திமுகவின் செய்தி தொடர்புத்துறை செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பண பரிவர்த்தனையில் சர்வதேச தொடர்பு எதுவும் இல்லை எனவே சிபிஐ விசாரிக்கும் அளவிற்கு இந்த வழக்கு ஒன்றும் பெரிய குற்றம் தொடர்பானதோ  இல்லை.

சிபிஐயில் தற்போது குறைவான எண்ணிக்கையில் தான் அதிகாரிகளும் உள்ளனர். எனவே, இந்த வழக்கில் தகுந்த உத்தரவை இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்க வேண்டும் என சிபிஐ தனது பதில் மனுவில் கூறியுள்ளது. இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.