திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (16:31 IST)

ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்…10 பேர் கைது !

தஞ்சாவூரில்  ரூ.2 கோடி மதிப்பிலான  கஞ்சாவை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்து, இதைக் கடத்திய 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட 3 சொகுசுக் கார்கள் மற்றும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.