ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (21:35 IST)

காரின் விலையை விட அதிகமான விலையில் மாட்டுவண்டி

தற்போது ஒரு லட்சம் ரூபாயில் இருந்தே புதிய கார் கிடைக்கும் நிலையில் காரின் விலையை விட அதிகமாக அதாவது ரூ.12 லட்சம் செலவில் மாட்டு வண்டி ஒன்றை திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த நெசவாளர் ஒருவர் செய்துள்ளார். இந்த மாட்டுவண்டியை காண அருகில் உள்ள கிராமத்தில் உள்ளவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஆரணி அருகே உள்ள ஒண்ணுபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த நெசவாளர் மார்கபந்து. இவர் இரண்டு காங்கேயம் காளைகளை ரூ.2 லட்சத்திற்கு வாங்கினார். அதன்பின்னர் முழுக்க முழுக்க தேக்கு மரத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மாட்டுவண்டியை ரூ.9 லட்சத்திற்கு செய்துள்ளார். அதன் பின்னர் மற்ற செலவுகள் அனைத்தும் சேர்த்து இந்த மாட்டு வண்டியை செய்ய மொத்தம் ரூ.12 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார் மார்க்கபந்து

காரின் விலையை விட அதிக மதிப்புள்ள இந்த மாட்டு வண்டியில்தான் மார்க்கபந்து தினமும் பயணம் செய்து வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய வாகனத்தை இப்போதைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இவ்வளவு செலவு செய்து இந்த மாட்டு வண்டியை தயாரித்ததாக மார்க்கபந்து கூறியுள்ளார்.