ரூ.1000 கோடி நிவாரண தொகுப்பு.... யார் யாருக்கு எவ்வளவு.? வெளியான தகவல்
சமீபத்தில், தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதில், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட ரூ. 1000 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகுப்புகளை முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதில்,
*சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுதுபார்க்க ரூ.385 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
.
*பயிர்ச்சேத நிவாரணமாக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
*சிறுவணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறப்பு கடன் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
*சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவித்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
*மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.350 கோடியும், நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.