1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (10:12 IST)

எனது கணவருக்கு பாதுகாப்பு வேண்டும்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடியின் மனைவி மனு..!

ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுண்டர் முறையில் கொல்லப்பட்ட நிலையில் இதே வழக்கில் கைதான பொண்ணை பாலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவரது மனைவி காவல் துறை ஆணையர் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவரான திருவேங்கடம் நேற்று திடீரென என்கவுண்டர் முறையில் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க என்கவுண்டர் செய்யப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இதே வழக்கில் கைதான ரவுடி பொண்ணை பாலுவிற்கு பாதுகாப்பு கேட்டு அவரது மனைவி சென்னை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
 
இதனை அடுத்து பொண்ணை பாலுவுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran