தமிழகத்தில் முதன்முறையாக ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ: சிங்கப்பெண்ணுக்கு பாராட்டுக்கள்
தமிழகத்தில் முதன்முறையாக ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ: சிங்கப்பெண்ணுக்கு பாராட்டுக்கள்
தமிழகத்தில் முதல்முறையாக பெண் எஸ்.ஐ ஒருவர் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளதை அடுத்து அந்த சிங்க பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கடந்த 20ஆம் தேதி அயனாவரம் காவல் உதவியாளர் சங்கர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்டமர்ம கும்பல் இரும்பு கம்பியால் சங்கரை தாக்கி விட்டு தப்பிவிட்டார்கள்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டபோது கௌதம் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான தனிப்படை கைது செய்தனர்
இந்த நிலையில் இன்னொரு குற்றவாளி சூர்யா என்பவர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் திடீரென போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். அப்போது காவல் உதவி ஆய்வாளர் மீனா துப்பாக்கியால் சூர்யாவின் முழங்கால் பகுதியில் சுட்டு பிடித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Edited by Mahendran