ஊரடங்கு உத்தரவை மீறிய தமிழக கிரிக்கெட் வீரர்– வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்த போலிஸார்!

வெள்ளி, 26 ஜூன் 2020 (07:45 IST)
தமிழக கிரிக்கெட் வீரர் ராபின் சிங் ஊரடங்கு விதிகளை மீறி காரில் பயணம் செய்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதிலும் தலைநகரில் தினமும் 1500 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட காரில் பயணம் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ராபின் சிங் தான் வசிக்கும் சாஸ்திரி நகர் பகுதியில் இருந்து திருவான்மியூருக்குக் காய்கறி வாங்க காரில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது காரை மடக்கிய போலீஸார் வழக்குப்பதிவு செய்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

ஜனநாயகன் படத்தை கிடப்பில் போட்ட கேவிஎன் நிறுவனம்!. விஜய் ஃபேன்ஸ் பாவம்..

உலகில் மீண்டும் காட்டாட்சி அபாயாம்!.. ரஷ்யா, சீனா நாடுகள் வார்னிங்!..

இப்பவும் சைலண்டாதான் இருப்பீங்களா?!.. தவெகவிடம் கேள்வியெழுப்பும் கனிமொழி!..

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை நடத்திய தீவிரவாதி சுட்டுக்கொலை.. பாகிஸ்தானில் இன்னொரு மர்ம மரணம்..!

அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை ஆசிரமம் தான்: பிரசாந்த் கிஷோர் அதிரடி முடிவு...!

அடுத்த கட்டுரையில்
Show comments