செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (15:34 IST)

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை: சென்னையில் பரபரப்பு!

சென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கி கிளையி, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.6 லட்சம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தவும் எடுக்கவும் வரிசையில் காத்திருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டியுள்ளார்.
 
மேலும் அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ரூ. 6 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளானர். 
சட்டம் ஒழுங்கு போலீஸார் வருவதற்குள் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் அதிகாரியிடம் சிக்கினார். போலீசார் பணத்தை பறிமுதல் செய்ததோடு அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட மர்ம நபரரை சாஸ்திரி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
 
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குற்றவாளி கேளம்பாக்கத்தைச் சேர்ந்த சுனில் குமார் யாதவ் என்பது தெரிந்துள்ளது. இந்தியன் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக, அங்குள்ள மற்றொரு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றுள்ளதாகவும் தெரிகிறது.