Daily Horoscope

பணவெறி பிடித்த வெறிநாய்கள்: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியின் கொதிக்கும் அறிக்கை!

Written By siva
Updated: புதன், 20 ஜனவரி 2021 (17:25 IST)
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ஒருசிலர் விலகி அரசியல் கட்சிகளில் விலகி வரும் நிலையில் தஞ்சை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வெற்றி மாறன் என்பவர் ஆவேசமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
அன்புத்‌ தலைவர்‌ அவர்களுக்கு...
 
நேற்று வரை 'தலைவா' என்று அழைத்தவர்கள்‌ இன்று *ரஜினிகாந்த்‌' என்று அழைப்பதை பார்க்கும்போது ரத்தம்‌ கொதிக்கிறது. நேற்று வந்த திரு.அர்ஜுனன்‌ மூர்த்தி அவர்கள்‌ தனது பழைய கட்சி திரும்ப அழைத்தும்‌ அவர்‌ போகவில்லை, அரசியலை தன்‌ உயிர்‌ மூச்சாகக்‌ கொண்ட திரு.தமிழருவி மணியன்‌ அவர்கள்‌ அரசியலை விட்டே விலகிச்‌ செல்கிறாரே தவிர வேறு கட்சிக்கு போகவில்லை. ஆனால்‌ சிவனின்‌ கழுத்தில்‌ இருந்த நாகம்‌ போல்‌ உங்களின்‌ நம்பிக்கையாய்‌ இருந்தவர்கள்‌... ஈரம்‌ காய்வதற்குள்‌ வேறு கட்சியில்‌ இணைவது எங்களுக்கு பேரதிர்ச்சியளிக்கிறது..
 
துரோகம்‌ அவர்களின்‌ முகங்களில்‌ வடிவதை எங்களால்‌ காண முடிகிறது. உங்களைச்‌ சுற்றி ஏதோ ஒரு 'மர்மம்‌' சூழ்ந்துள்ளது என்பதை மட்டும்‌ எங்களால்‌ உணர முடிகிறது. இனி நீங்கள்‌ எங்களை அடித்து விரட்டினாலும்‌ உங்களின்‌ காலை சுற்றியே தான்‌ கிடப்போம்‌, எனது இந்தப்‌ பிறவியின்‌ பயனாக நான்‌ நினைப்பது நீங்கள்‌ வாழும்‌ இந்த சமகாலத்தில்‌ நானும்‌ வாழ்வதே. அது போதும்‌.
 
களத்தில்‌ நின்று மோத வக்கற்ற பதவி வெறி, பணவெறி பிடித்த வெறிநாய்கள்‌ இனி எதையும்‌ செய்யத்‌ துணிவார்கள்‌. நன்றி கெட்ட உலகம்‌ இது. நினைத்துப்‌ பார்த்தால்‌ நெஞ்சம்‌ பதறுகிறது. உடனிருந்து உயிரை கூட எடுக்க துணிந்து விடுவார்கள்‌. உங்களின்‌ முடிவு சரியே... நமக்கு வேண்டாம்‌ தலைவா இந்த அரசியல்‌...! ஒரேதாய்‌. ஒரே தந்தை ஒரே தலைவன்‌. உயிர்‌ இருக்கும்‌ வரை உங்களுடன்‌...
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments