1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (10:14 IST)

மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை இல்லை - ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை இல்லை என முன்னாள் நீதி அரசர் சந்துரு அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் தலைமையில் தான் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பரிந்துரை செய்யப்பட்டது என்பது அதன் அடிப்படையில் தான் சட்டமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்ப உரிமை இல்லை என்றும் மறு பரிசீலனில் செய்யுங்கள் என வேண்டுகோள் மட்டுமே ஆளுநர் விடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். 
 
மீண்டும் நீதிமன்றத்திடம் குட்டு வாங்க வேண்டும் என்று ஆளுநர் முடிவு செய்துவிட்டார் என்றும் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தான் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒருவர் நேருக்கு நேர் சூதாட்டம் விளையாடுவதில் தான் தவறு இல்லை என்று கூறியுள்ளது என்றும் ஆனால் இது முகம் தெரியாத ஒரு மெஷினுடன் விளையாடுவது சட்டப்படி தவறு என்றும் இதை தடை செய்ய மசோதா தாராளமாக தாக்கல் செய்யலாம் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருது அறிவித்துள்ளார்.
 
Edited by Mahendran