நாளை முதல் கோவையில் கட்டுப்பாடுகள் !
கோவையில் சில நாட்களாகவே மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் நாளை ( 08-08-21_ மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவானது. அதிக உயிரிழப்புகளையும் பாதிப்பையும் ஏற்படுத்திய நிலையில், கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. விரைவில் மூன்றாவது அலை பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகல் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்திலும் கொரொனா தொற்று குறைந்துவருகிறது. எனவே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
கோவையில் சில நாட்களாகவே மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் நாளை ( 08-08-21_ மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள், பேக்கரிகள்,, டீ கடைக்ள் காலை 6 மணிஉத;ல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதி எனவும்,கோவை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவையில் உள்ள சுற்றுலாதளங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வர தடை விதிக்கப்படுகிறது. பூங்காக்களுக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டும் பொதுமக்கள் வரத் தடைவிதிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில், மாவட்டத்தில் உள்ள அனைத்து மால்களும், வணிக வளாகங்களும் இயங்கட் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.