கொரோனாவை கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள்!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 12 ஜனவரி 2022 (09:08 IST)
டாஸ்மாக் கடைகளில் நிலையான இயக்க நடைமுறைகள்  பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மதுக்கடைகள் திறந்து இருப்பதால் மது பிரியர்கள் மதுவாங்க முண்டியடிப்பதால் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக முழு ஊரடங்கிற்கு முந்தைய நாளில் பல மதுப்ரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுவை வாங்கி உள்ளனர். 
 
இந்நிலையில் நிலையான இயக்க நடைமுறைகள்  பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது.
2. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
3. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு பேல் கடையில் அனுமதிக்கக் கூடாது.
4. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கமனம் அணிந்திருக்க வேண்டும். 
5. முகக்கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும். 
 
இதை தவிர பல்வேறு கொரோனா வைரஸ் நோய்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

எதுக்கு வந்தீங்க?!.. சீன் போடப்போன ஜூலி!.. விரட்டி அடித்த போராட்டக்குழு!..

இந்த ரெண்டையும் செய்யணும்!.. போராட்டம் தொடரும்.. CJP அபிஜீத் தீப்கே திட்டவட்டம்!..

திமுக ஆட்சியில் எங்க போனீங்க?.... ரஞ்சித்.. அமீர்!.. வெற்றிமாறனை பொளக்கும் நெட்டிசன்ஸ்!..

அரசியலில் இருந்து விலகுகிறேன்!. இனிமே அன்புமணி மட்டும்தான்!.. ராமதாஸ் அறிவிப்பு..

பணிந்தது பாஜக!.. தர்மேந்திர பிரதான் ராஜினாமா!.. இளைஞர்களின் போராட்டம் வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments