புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (13:51 IST)

ஜனவரி 16ஆம் தேதிக்கான முன்பதிவு நிறுத்தம்: போக்குவரத்து துறை அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி!

ஜனவரி 16 ஆம் தேதிக்கான முன்பதிவு நிறுத்தப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு செல்லும் பயணிகள் ஊர் திரும்பும்போது எப்படி என்ற அதிர்ச்சி கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
 
ஜனவரி 16ஆம் தேதிக்கு முன் பதிவை நிறுத்தி வைத்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் 
 
ஜனவரி 16ஆம் தேதி காண முன்பதிவு நிறுத்தப்பட்டதால் பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
மேலும் ஜனவரி 16ஆம் தேதிக்கு பின் போக்குவரத்து நிறுத்தப்படுமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.