களத்தில் இறங்கியது கமாண்டோ படை: உயிருடன் மீட்கப்பட்ட மாணவிகள் விபரம்
தேனி அருகே உள்ள குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக நேற்றிரவே கமாண்டர் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து விடியவிடிய தீயில் சிக்கிய மாணவிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 36 பேரில், இதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காட்டுத்தீயில் சிக்கிய மேலும் 4 பேர் கேரளாவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல். இதுவரை இந்த தீவிபத்தில் பலியானவர்கள் குறித்த தகவல் இல்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த சிறுமி நேகா (9) பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் ,அதேபோல் தீவிபத்தில் காயமடைந்த ஸ்வேதா என்ற மாணவி தேனியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் தேனியில் இருந்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளதுj.
மேலும் இதுவரை மீட்புப்படையினர்களால் மீட்கப்பட்ட மாணவிகளின் விபரங்கள் பின்வருமாறு:
சாதனா, பாவனா, நேகா, சபீதா, பூஜா, சஹானா, மோனிஷா, ஸ்வேதா, இலக்கியா, விஜயலட்சுமி மற்றும் அனுவித்யா