1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (22:32 IST)

குழந்தை சுஜித்தி மீட்க பிரார்த்தனை செய்யும் சமூக வலைதள பயனாளர்கள்

திருச்சி அருகே மணப்பாறையில் ஆழ்துளை கிணறு ஒன்றில் இரண்டு வயது சுஜித் என்ற குழந்தை தவறி விழுந்து விழுந்து விட்டதை அடுத்து அந்த குழந்தையை உயிருடன் மீட்க தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இது குறித்த செய்தி பரவி வருவதை அடுத்து சுஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என டிவிட்டர் பயனாளிகள் இதற்கென ஒரு ஹேஷ்டேக்க பதிவு செய்து பிரார்த்தனை செய்து வருகின்றனர் 
 
இதனை அடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு நெல்லையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை பத்திரமாக மீட்ட மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தற்போது மணப்பாறைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளார். அவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணிகள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் பிரத்தியேக கருவிகளும் கொண்டுவரப்பட்டு குழந்தையை உயிருடன் மீட்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் சுஜித் மீட்கப்பட்டவுடன் முதலுதவி செய்ய மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது வெளிவந்துள்ளது