பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை நீடிக்க கோரிக்கை!
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை நீடிக்க கோரி முதலமைச்சரை நேரில் சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்தார். பின் செய்தியாளரை சந்தித்து அவர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன் என்றும் பேரறிவாளனுக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெறுவதால் பரோலை நீடிக்க கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், பரோலை நீடிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், பேரறிவாளனை விடுவிக்கும் எண்ணத்தில் தான் அரசு உள்ளதாக முதலமைச்சர் கூறியதாகவும் அற்புதம்மாள் தெரிவித்தார்.