1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (18:59 IST)

மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

MK Stalin
மக்களுக்கான அடிப்படை சேவைகள் கிடைத்திட முதல்வரின் முகவரி துறை உறுதுணையாக இருக்கும்! நமது #DravidianModel அரசின் முன்னெடுப்புகள் கடைக்கோடி மனிதர் வரை பயனளிக்கும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

தேர்தலுக்கு முன்பு #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின் என்ற எனது சுற்றுப்பயணத்தில் பெற்ற மனுக்களைத் தீர்க்க உருவான #உங்கள்_தொகுதியில்_முதலமைச்சர் துறை, #முதல்வரின்_முகவரி என உருப்பெற்றது.

அதன் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுக்கூட்டத்தில், இன்று இத்திட்டத்தால் பலனடைந்தவர்கள் - வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் உரையாடி - அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன்.

மக்களுக்கான அடிப்படை சேவைகள் கிடைத்திட முதல்வரின் முகவரி துறை உறுதுணையாக இருக்கும்! நமது #DravidianModel அரசின் முன்னெடுப்புகள் கடைக்கோடி மனிதர் வரை பயனளிக்கும்!என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் அளிக்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதில், மாநகராட்சி மேயர்களுக்கு  மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் துணை மேயர்களுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும்  அதேபோல்  மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.