1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (21:19 IST)

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

சமீபத்தில் சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.

சிவகாசி அருகில் உள்ள காளையார்க்குறிச்சி என்ற பகுதியில் சற்று முன்னர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது என்பதும் இந்த வெடி விபத்தில் 3 பேர் பலியானதாக வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவலை பார்த்தோம். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது அதுமட்டுமின்றி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக  அதிகரித்தது.

இந்நிலையில் சிவகசி அருகே காளையர் குறிச்சியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.