ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூன் 2020 (09:21 IST)

நியூசிலாந்து போல் சென்னையும் கொரோனா இல்லாத நகரமாக மாறும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிக்கப்பட்டு தத்தளித்து வரும் நிலையில் நியூசிலாந்து நாடு மட்டும் கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது. அந்நாடு எடுத்த அதிரடி நடவடிக்கை மட்டுமன்றி அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் கொடுத்த ஒத்துழைப்பும், இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது 
 
தற்போது நியூசிலாந்தில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்றும் மக்கள் அங்கு சுதந்திரமாக வலம் வருகிறார்கள் என்றும் ஊரடங்கு உள்பட எந்த கட்டுப்பாட்டும் அந்நாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து உருவானது போல் சென்னையையும் மாற்ற முடியும் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா இல்லாத திருவிக நகர் மண்டலத்தை அரசு அதிகாரிகள் உருவாக்குவார்கள் என்று தான் நம்புவதாகவும், கொரோனா பரவலை தடுக்க தெருவாரியாக 100% விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆர் வி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் குறிப்பாக சென்னை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நியூசிலாந்து போல் சென்னையும் கொரோனா இல்லாத நகரமாக மாறும் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது