வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 அக்டோபர் 2018 (10:14 IST)

ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்ட்ரைக் வாபஸ் –இன்று முதல் பணி

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நியாய விலைக் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் திரும்ப பெறப்பட்ட்டுள்ளது.

தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், கிடங்குகளில் இருந்து வழங்கபடும் பொருட்களை எடை குறையாமல் வழங்குதல் மற்றும் அனைத்து கடைகளிலும் எடையாளர்களை நியமித்தல் உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி 15-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் 25000 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து தமிழக அரசு சார்பில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஊழியர்களின் முக்கியக்கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. அதனால் இன்று முதல் ஊழியர்கள் வேலைக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.