வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 12 ஆகஸ்ட் 2023 (21:15 IST)

ஜெயிலர் படத்தை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக திரையிட்ட Rapido நிறுவனம்

jailer
ரஜினியின் ஜெயிலர் படத்தை பிரபல நிறுவனம் தங்கள்  ஊழியர்களுக்கு  இலவசமாக திரையிட்டுள்ளது.
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம்  நேற்று  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம்( ஆகஸ்ட் 10)  காலை 9 மணிக்கு  வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

நேற்று முன்தின  வெளியான முதல் நாளில் மட்டும் இப்படம்  உலகம் முழுவதும் ரூ.100 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் 2 வது நாளில் ரூ.200 கோடி வரை வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே,   பிரபல தனியார் கம்பெனிகள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் பட ரிலீஸுக்காக ஆகஸ்ட் 10 ஆம் தேதி விடுமுறை அளிப்பதாக அறிவித்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.
rapido

இந்த நிலையில், இந்தியாவின் பிரபலமான ரேபிட்டோ ஆட்டோ சென்னையில், 500க்கும் மேற்பட்ட ரேபிட்டோ ஆட்டோ ஓட்டுனர்களுகு ஜெயிலர் படத்தை இலவசமாக திரையிட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல CNN என்ற செய்தி நிறுவனம், ‘’இந்தியாவின் Big SuperStar -ன்  ஜெயிலர் படத்திற்கு டிக்கெட் கொடுத்து விடுமுறையும் அறிவித்த கார்பரேட் நிறுவனங்கள்’’ என்று செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.