வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 12 ஆகஸ்ட் 2023 (20:14 IST)

விஷால்-ஹரி படத்தின் முக்கிய அப்டேட்...

vishal
தமிழ் சினிமாவின்  முன்னணி  இயக்குனர் ஹரி. இவர்  தமிழ், சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு விஷாலுடன் அவர் இணைந்துள்ளார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளனர்.  கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கின்றார்.

தூத்துக்குடியில்  இப்பட ஷூட்டிங் தொடங்கிய நிலையில், இதுகுறித்து நடிகர் விஷால் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’ தூத்துக்குடி விளாத்திக்குளம்  பகுதியில்    நல்ல உற்சாகமாக உணர்கிறேன்…விஷால்34 படத்தில் ஹரியுடன் 3 வது முறையாக இணைந்துள்ளேன். ஸ்டோன் பென்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. திலிப் சுப்புராயன் சண்டை காட்சிகளை இயக்கியுள்ளார்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பகுதியில் மக்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.