வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (14:28 IST)

திடீரென தலைமுடியை தானம் செய்த ராணிமேரி கல்லூரி மாணவிகள்: என்ன காரணம்?

college
திடீரென தலைமுடியை தானம் செய்த ராணிமேரி கல்லூரி மாணவிகள்: என்ன காரணம்?
சென்னை ராணி மேரி கல்லூரியில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென தங்களுடைய தலைமுடியை தானம் செய்ய முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
புற்றுநோய் பாதிப்புக்கு அளிக்கப்படும் கதிரியக்க சிகிச்சை காரணமாக தலைமுடியை இழந்தவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக சென்னை ராணிமேரி கல்லூரி மாணவிகள் இன்று தலைமுடியை தானம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர். 
 
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களுடைய தலைமுடியின் ஒரு சிறு பகுதியை தானமாக அளித்தனர். மாணவிகள் மட்டுமின்றி கல்லூரி பேராசிரியர்களும் மாணவிகளின் பெற்றோர்களும் தாமாகவே முன்வந்து தலைமுடியை தானம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
மாணவிகளின் இந்த மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்
 
Edited by Mahendran