ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (15:02 IST)

ராம்குமாரின் ஒப்புதல் இல்லாத ஜாமீன் மனு: காவல்துறை எதிர்ப்பு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு காவல்துறை எதிர்பு தெரிவித்தது.


 
 
ராம்குமாருக்கு ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார். அதில் சுவாதி கொலைக்கும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தான் அப்பாவி. ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று ராம்குமார் கூறியுள்ளார் என கூறப்பட்டது.
 
இந்த மனுவின் விசாரணையின் போது எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை, ராம்குமார் மயக்கநிலையில் இருந்தபோது ராம்குமாரின் ஒப்புதல் இல்லாமலேயே ராம்குமார் சார்பில் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். எனவே, அதை விசாரிக்கக் கூடாது என்றது.
 
மேலும், ராம்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எவரின் ஒப்புதலும் இல்லாமலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் ஜி.கிருஷ்ண மூர்த்தி.
 
இதனை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ராம்குமாரின் ஜாமீன் மனுவை ஏற்கக் கூடாது என்பதற்கான அரசின் விளக்கத்தை தாக்கல்செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார். தற்போதைய விசாரணைநிலையில், இணைப்பு மனுக்களை அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி மனுமீதான விசாரணையை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.