வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 29 மே 2022 (15:41 IST)

இதைத்தான் நாங்க NRCன்னு சொன்னோம்: தமிழக அரசுக்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்ஸ்

NI staffs
இதைத்தான் நாங்க NRCன்னு சொன்னோம்: தமிழக அரசுக்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்ஸ்
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் NRC  என்ற சட்டத்தை அமல்படுத்திய போது திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் தற்போது திமுக அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் NRC  சட்டம் போன்ற ஒரு அறிவிப்பும் வெளியாகியுள்ள நிலையில் இதைத்தான் நாங்கள் NRC என்று சொன்னோம் என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
 
இது குறித்து ராமேஸ்வரம் நகராட்சி வெளிமாநில நபர்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ’ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குடியிருக்கும் வெளிமாநில நபர்கள் மற்றும் வெளிமாநில நபர்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளர்கள், என்ஜினீயர்கள், கட்டிட காண்டிராக்டர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், இறால் பண்ணை உரிமையாளர்கள், பானி பூரி மற்றும் குல்பி ஐஸ் வைத்து தொழில் செய்பவர்கள், உள்ளூர்வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளிமாநிலத்தவர் ஒவ்வொருவரும் பெயர், முகவரி, தொலைபேசி எண், தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தின் பெயர், நிறுவனத்தின் முகவரி, உட்பட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
 
 இந்த விவரங்களை தாக்கல் செய்ய தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமேஸ்வரம் நகராட்சி அறிவித்துள்ளது.மத்திய அரசு கொண்டுவந்த NRC  சட்டம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.