Daily Horoscope
✕

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்: 800 விசைப்படகுகள் இயங்கவில்லை!

Written By siva
Updated: திங்கள், 4 ஏப்ரல் 2022 (08:42 IST)
ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
 
 இலங்கை கடற்படையால் அவ்வப்போது ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன 
 
நேற்று கூட இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்கின்றனர்
 
இந்த போராட்டம் காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பதும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

இந்தியாவை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன்!.. அட நம்ம புதினே சொல்லிட்டாரே!...

இன்று முதல் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ரயில் சேவை.. இருநாட்டு பிரதமர்கள் தொடங்கி வைப்பு..

ரூ.5,000 வரை உடனடி அபராதம் விதிக்கப்படும்.. சபரிமலை பக்தர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை...

காங்கோவில் கோரத்தாண்டவம் ஆடும் எபோலா!.. 5,600க்கும் மேற்பட்டோர் பலி!..

இனி ரத்தத்துக்கு தட்டுப்பாடு இருக்காது! தமிழகம் முழுவதும் ஆண்டு முழுவதும் ரத்த தான முகாம்... அரசு அதிரடி அரசாணை!

அடுத்த கட்டுரையில்
Show comments