அதிமுகவில் இருந்து விலக ராமராஜன் முடிவா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் இருந்து நட்சத்திர பேச்சாளர்கள் விலகி வருவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
நடிகை ஆர்த்தி, நடிகை விந்தியா, ராதாரவி, ஆனந்த்ராஜ், அனிதா குப்புசாமி என அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் விலகி வரும் நிலையில் தற்போது நடிகர் ராமராஜனும் விலகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக இருந்தபோது, ஓபிஎஸ் அணியில் இருந்த ராமராஜனுக்கு இரு அணிகளும் இணைந்த பின்னர் உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், அதிமுக பொதுக்கூட்டமும் அதிகளவில் நடைபெறாததால் பேச்சாளர்களுக்கு போதிய வருமானமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த அதிமுக செய்தி தொடர்பாளர் புதுக்கோட்டை செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தாயகத்தில் சந்தித்து மதிமுகவில் இணைந்துள்ளார். இதனையடுத்து ராமராஜனும் மதிமுகவில் விரைவில் இணைவார் என்று கூறப்படுகிறது.