ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்.. ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு..!
ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் நிறுவப்பட்ட நிலையில் இதில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நிலையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தனது சமூக வலைதள பக்கத்தில் செயற்கைக்கோள் வழியாக எடுக்கப்பட்ட ராமர் பாலம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள ராமர் பாலம் அல்லது சேது பாலம் என்று அழைக்கப்படும் இந்த பாலம் ஒரு காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த நிலப்பரப்பு என்று கூறப்படுகிறது.
இந்த பாலம் 15 ஆம் நூற்றாண்டு வரை பயணம் செய்யக்கூடிய வகையில் இருந்தது என்றும் அதன் பிறகு சில புயல்கள் மற்றும் கனமழையால் அழிந்ததாகவும் கூறப்படுகிறது. ராமர் பாலம் சுற்றியுள்ள பகுதிகளில் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருப்பதாகவும் ஏராளமான மீன்கள், கடல் பசு, டால்பின் ஆகியவை செழித்து வளரக்கூடிய பகுதியாக இருப்பதாகவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் இந்த பகுதி குறித்து தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
Edited by Siva