நான் வலியுறுத்தியவைகளை நீதிமன்றம் ஆணையாக பிறப்பித்துள்ளது! – ராமதாஸ் ட்வீட்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தனது வலியுறுத்தல்களை நீதிமன்றம் ஆணையாக பிறப்பித்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டோர், இறந்தோர் எண்ணிக்கை பதிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் கொரோனா இறப்புகள் மறைக்காமல் வெளியிடப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்காமல் வெளியிட வேண்டும்; அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்; கொரோனா சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இவை அனைத்தும் நான் வலியுறுத்தி வந்தவை என்பதில் மகிழ்ச்சி!” என்று தெரிவித்துள்ளார்.