1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Udhayanithi stalin give relief things in chepauk

நிவாரண பொருட்களில் உதயநிதி படம்? – சர்ச்சைக்கு விளக்கம்!

Tamilnadu
கொரோனா நிவாரணமாக தனது தொகுதியில் நிவாரண பொருட்களை உதயநிதி வழங்கிய நிலையில் அதில் அவரது புகைப்படம் உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் முழு ஊரடங்கு உள்ள நிலையில் சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பையை சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அந்த பையில் உதயநிதி ஸ்டாலின் படம், திமுக கொடி போன்றவை இடம்பெற்றிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து திமுக வட்டாரங்களில் வெளியான தகவலில் உதயநிதி வழங்கிய நிவாரண பொருட்கள் அவர் சொந்த பணத்தில் வழங்கப்பட்டது என்றும், அரசு பணத்திலோ, எம்எல்ஏ நிதியிலோ அது வழங்கப்படாத நிலையில் அவரது படம் இடம்பெறுவது முறையற்றது ஆகாத் என பேசிக்கொள்ளப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
`துரைமுருகனோடு அ.தி.மு.க வேட்பாளர் சமரசமா? காட்பாடி தொகுதியில் நடந்தது என்ன?