வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (10:59 IST)

’ஆடு நனையுதுனு, ஓநாய் அழுகுதாம்’ ஸ்டாலினை விளாசிய ராமதாஸ்!

வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவதாக ஸ்டாலின் கூறியிருப்பதை விமர்சித்து பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
பாமக தலைவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்பது திமுக தலைவர் ஸ்டாலின் அள்ளி வீசும் வெற்று வாக்குறுதிகள். 
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வி அடைவது மட்டுமின்றி டெபாசிட் வாங்க முடியாதோ என்ற அச்சம் அவரை இந்த நிலைக்கு தல்ளியிருக்கிறது. வன்னியர்களின் ஓட்டுகளை சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார் ஸ்டாலின். 
வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டில் துரோகம் இழைத்தவர் கருணாநிதி. வன்னியர்களின் போராட்டத்தால்தான் இட ஒதுக்கீடு திடைத்தெதே தவிர திமுக அதை பெற்றுதரவில்லை. வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்குவோம் என ஸ்டாலின் கூறிவது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதற்கு இணையானது. 
 
தேர்தலின் போது கொண்டாடவும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிவதற்கு வன்னியர்கள் கறிவேப்பிலை அல்ல என்பதை காலமும் மக்கள் தீர்ப்பும் ஸ்டாலினுக்கு உணர்த்தும் என குறிப்பிட்டுள்ளார்.