செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2019 (17:02 IST)

திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு! – ஸ்டாலின் திடீர் அறிக்கை!

திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்வதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைதேர்தல் நடைபெற இருக்கிறது. விக்கிரவாண்டியில் மட்டும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின் “வன்னியர்கள் நலனிற்காக ஆரம்பகாலம் முதலே பல சலுகைகளை வழங்கியவர் கலைஞர் அவர்கள். மேலும் அவர்களுக்கு 20 சதவீதம் தனி ஒதுக்கீடு அளித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்து உதவியர் கலைஞர்தான்” என்ரும் கூறியுள்ளார்.

மேலும் திமுக ஆட்சி அமைத்தால் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த வன்னிய சமுதாயத்தை சேர்ந்த ஏ.கோவிந்தசாமிக்கு சிலை அமைக்கப்படும் எனவும், வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்களை கவரவே இந்த அறிக்கையை அவர் வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வன்னியர் சமுதாயத்தின் பெரும்பாலானோர் பாமகவுக்கு தங்கள் ஆதரவை செலுத்தி வருகின்றனர். பாமகவோ அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. இதனால் பாமக ஆதரவு மனநிலையில் உள்ள மக்களை திமுக பக்கம் ஈர்க்கவே இதுபோன்ற திடீர் அறிக்கைகளை ஸ்டாலின் அளிக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.