ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 மே 2022 (11:21 IST)

தமிழக எம்.பி தேர்தல்; நாளை முதல் வேட்புமனு தாக்கல்!

TN assembly
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான வேட்பு மனு நாளை முதல் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டின் சார்பில் மாநிலங்களவையில் இடம்பெற வேண்டிய 6 எம்.பிக்களின் இடங்கள் காலியாக உள்ள நிலையில் சமீபத்தில் அதற்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டன.

இந்த 6 உறுப்பினர் இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் தலைமைச்செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரி முன்பு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.