வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 ஜனவரி 2025 (07:25 IST)

புத்தாண்டு தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த ஓபிஎஸ்.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேற்றைய புத்தாண்டு தினத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவரது வீட்டில் சந்தித்து பேசி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று மாலை நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டன் உள்ள அவரது வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எனது அண்ணன் ரஜினி மீது எனக்கு மிகுந்த மரியாதை மற்றும் நம்பிக்கை இருக்கிறது. அவரை மரியாதை நிமித்தமாகவே இன்று சந்தித்தேன். அவர் நல்ல உடல் நலத்துடன் திடகாத்திரமாக உள்ளார். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பு முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமாகவே ஆனது மட்டுமே," என்று தெரிவித்தார்.
 
அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் குறித்து பேசியபோது, "தமிழகத்தில் இனி ஒரு முறை இன்னொரு சம்பவம் நடைபெறக் கூடாது. இந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பு ஆளும் திமுக அரசுக்கு உண்டு," என்று பதில் அளித்தார் 
 
 
Edited by Siva