Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (16:17 IST)
சரத்குமாருக்கு எதிரான போராட்டம்: ரஜினி திடீர் உத்தரவு
துக்ளக் விழாவில் பேசிய ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி தனது கருத்தை கூறினார். மேலும் தமிழ்நாட்டில் அரசியல் சூழல் அசாதாரணமாக உள்ளது என கூறினார். இதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்படி என்ன சூழல் நிலவுகிறது என்பதை ரஜினி தெளிவுபடுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டு அரசியல் பற்றி கருத்து கூற ரஜினிக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் அரசியலுக்கு வந்தால் நான் தான் முதலில் எதிர்ப்பேன் என அவர் கூறினார்.
சரத்குமாரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் எதிப்பு எழுந்தது. சில இடங்களில் சரத்குமாருக்கு எதிராக உருவ பொம்மை எரிக்கும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் ரஜினி குறித்து தான் அவ்வாறு கூறவில்லை என்று சரத்குமார் விளக்கம் அளித்தார். இதையடுத்து ரசிகர்மன்ற முக்கிய நிர்வாகிகளை தொடர்புகொண்ட ரஜினிகாந்த், சரத்குமாருக்கு எதிராக எந்த ஒரு கருத்தோ போராட்டமோ வேண்டாம் என்று கூறினார்.