நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை - ரஜினி ஓப்பன் டாக்
கடந்த சில வருடங்களாக 2.0 மற்றும் காலா ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ளார். ஒருபக்கம் அவரது கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்நிலையில், திடீரென ரஜினிகாந்த் கடந்த 9ம் தேதி அவருக்கு மிகவும் பிடித்தமான இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.
இரு வாரங்கள் அங்கு இருந்து பல இடங்களை சுற்றிப் பார்க்கப் போவதாக அவர் கூறியுள்ளார். அந்நிலையில், இமயமலையில் உள்ள ரஜினியின் புகைப்படங்களில் சில வெளியாகியுள்ளது. அவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், டேராடூனில் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஜினி “நான் இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. எனவே, நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை. எனவே அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் கூற விருப்பமில்லை” எனக் கூறினார்.
அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினி, காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல முக்கிய பிரச்சனைகளுக்கு வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் என்கிற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ள நிலையில், நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என அவர் கூறியிருப்பது முக்கியத்துவம வாய்ந்ததாக கருதப்படுகிறது.