1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஜூலை 2018 (20:43 IST)

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த ரஜினி!

வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.  
இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் மற்றும் சீறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் எனவும் மருத்துவனை சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது. 
 
காவிரி மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கோபாலபுரத்தில் உள்ள அவரின் வீட்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கருணாநிதியின் உடல்நிலை திமுக தொண்டர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று, கமல்ஹாசன், கோபாலபுரத்துக்கு வந்த நிலையில் இன்றைய தினம் ரஜினிகாந்த் திரைப்பட படப்பிடிப்புக்காக டேராடூனில் உள்ளதால் ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.