தலைவர் நன்றாக இருக்கிறார் - மு.க.அழகிரி பேட்டி
வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் மற்றும் சீறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் எனவும் மருத்துவனை சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது. காவிரி மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கோபாலபுரத்தில் உள்ள அவரின் வீட்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கருணாநிதியின் உடல்நிலை திமுக தொண்டர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அவரின் மகன் மு.க.அழகிரி சென்னை வந்தார். அதன்பின் கோபாலபுரம் இல்லம் சென்ற அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் “தலைவர் நன்றாக இருக்கிறார்” என அவரின் வழக்கமான ஒரே வாக்கியத்தில் பதிலளித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவரைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, டி. ராஜேந்தர், ராதாரவி, ஆனந்தராஜ், வைகோ, நல்லகண்ணு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து அவரின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.