செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 10 மே 2018 (11:05 IST)

32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி அவசர ஆலோசனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடைபெற்ற 'காலா' இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்த அறிவிப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் குறித்த எந்த அறிவிப்பையும் தெரிவிக்காத ரஜினி, மீண்டும் நேரம் வரும்போது அரசியல் பேசுகிறேன் என்று கூறி தனது உரையை முடித்து கொண்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது
 
இந்த நிலையில் சமீபத்தில் தமிழகம் முழுவதும் நியமனம் செய்யப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் 32 மாவட்ட செயலாளர்கல் சென்னைக்கு இன்று வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அனைவரும் போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு சென்று ரஜினியுடன் ஆலோசனை செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யும் பணி முடிந்துவிட்டதால் வெகுவிரைவில் ரஜினிகாந்த் குறிப்பிட்ட அந்த நேரம் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பின்னர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசுவார் என்றும் ரசிகர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.