Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முழுமையான இந்து மாநிலம் தமிழ்நாடுதான் ! – துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு !

Updated: புதன், 15 ஜனவரி 2020 (09:38 IST)
துக்ளக் பொன் விழா ஆண்டில் பேசிய குருமூர்த்தி இந்தியாவில் முழுமையான் இந்து மாநிலம் தமிழ்நாடுதான் எனப் பேசியுள்ளார்.

துக்ளக் பொன்விழா ஆண்டு நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது. அதில் துக்ளக் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினிகாந்த் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது.

ஆனால் அதற்கு முன்னதாகப் பேசியதாக குருமூர்த்தி பேசியது கவனத்தில் கொள்ளப்படாமல் போனது. அவரது பேச்சில் ‘இந்தியாவில் முழுமையான இந்து மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். தமிழக இந்துக்கள் அரசியல் ரீதியாக இந்துக்களாக இருப்பதில்லை. தமிழகத்தில் இந்து எதிர்ப்பு மனநிலை இருப்பதாகச் சொல்லப்படுவதை நான் ஏற்கவில்லை. தமிழக அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்துள்ளது. காசு கொடுக்காமல் அவர்களுக்குக் கூட்டம் கூடுவதில்லை. சோ எதையும் வெளிப்படையாகச் செய்வார். நான் எதையும் வெளிப்படையாகச் செய்ய மாட்டேன். அதனால் வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதில் பங்கு வகிப்பேனா என்பது பற்றி இங்கு சொல்ல மாட்டேன்’ என பேசியுள்ளார்.

தமிழர்களே இந்துக்கள் இல்லை என தமிழ் தேசிய அமைப்புகள் மற்றும் திராவிட இயக்கங்கள் சொல்லி வரும் நிலையில் குருமூர்த்தியின் தமிழகம் இந்து மாநிலம் என்ற கருத்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை!.. தமிழக அரசு அதிரடி...

அதிமுகவின் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவில் இணைந்தார் வடசென்னை ராஜேஷ்...

பல ஆண்டுகளாக ரூ.8.77 கோடி வாடகை கொடுக்கமால் டிமிக்கி கொடுத்த நிறுவனம்.. 2 மாதத்தில் வசூல் செய்த தவெக அரசு..

அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரம்.. முதல்வர் விஜய் நேரடி ஒப்புதல் தேவை.. அதிரடி உத்தரவு..

ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments