ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 17 மே 2017 (12:35 IST)

பாஜகவின் அழைப்புக்கு ரஜினியின் நோ கமெண்ட்ஸ்!

பாஜகவின் அழைப்புக்கு ரஜினியின் நோ கமெண்ட்ஸ்!

தமிழக அரசியலில் ரஜினியின் பிரவேசம் எப்படி இருக்கும் என்பது தான் கடந்த இரண்டு தினங்களாக ஹாட் டாப்பிக்காக உள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தின் மத்தியிலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தான பேச்சுக்கள் தமிழகத்தில் ஒலித்துக்கொண்டு தான் இருந்தது.


 
 
கடந்த திங்கட்கிழமை முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். 9 வருடங்களுக்கு பின்னர் ரஜினி ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். அதைவிட உற்சாகம் அவர் கடந்த திங்கள் கிழமை பேசிய அவரது அரசியல் பிரவேசம் குறித்தான பேச்சுதான்.
 
கடவுள் விரும்பினால் தான் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என கூறிய ரஜினி தான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் இருப்பவர்களை அருகில் கூட நெருங்கவிடப்போவதில்லை என திட்டவட்டமாக கூறினார்.
 
நீண்ட நாட்களுக்கு பின்னர் ரஜினி அரசியல் குறித்து பேசியதால் பல ஆண்டுகளாக இருந்த யூகங்கள் மீண்டும் கிளம்பின. ரஜினி அரசியலில் நுழைந்தால் பாஜகவில் சேருவாரா இல்லை புதிய கட்சி தொடங்குவாரா என்ற கேள்விகள் எழும்பின.
 
முன்னதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் ரஜினி தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தது குறித்து இன்று காலை ரஜினியிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நோ கமென்ட்ஸ் என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்துவிட்டு ரஜினி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.