1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (22:23 IST)

ரசிகர்களை தொண்டர்களாக மாற்ற வேண்டும்; ரஜினி ரசிகர்மன்ற தலைவர்

ரசிகர்கள் அனைவரையும் தொண்டர்களாக மாற்ற வேண்டும் என ரஜினி ரசிகர் மன்ற தலைவர் எம்.நாகராஜன் கூறியுள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று இன்று காலை அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சிலர் அவரது அரசியல் வருகைக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் எம்.நாகராஜன் கூறியதாவது:-
 
ரசிகர்கள் அனைவரையும் தொண்டர்களாக மாற்ற வேண்டும். நகரம், கிராமங்களில் உள்ள தெருக்கள் தோறும் உறுப்பினர்களைச் சேருங்கள். இதன்மூலம் கட்சிக்கு பலம் சேர்க்க வேண்டும். அதன்பின்னர் ரஜினிகாந்தின் கட்டளையை ஏற்று செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.