1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 நவம்பர் 2018 (16:27 IST)

நிவாரணப்பொருட்களை அனுப்பிய ரஜினி மன்றத்தினர்

கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் கஜா புயல் கடந்த வாரம் புதுக்கோட்டை, நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் தாக்கத்தினை ஏற்படுத்தியதையடுத்து ஆங்காங்கே, அரசியல் கட்சியினர் மட்டுமில்லாமல் சமூக சேவகர்களும் ஏராளமானோர் புயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பெட்சீட், கொசுவலை, துணி வகைகள், மருந்து, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம், சார்பு அணிகள், நகரம், ஒன்றியம் சார்பில் ரூ 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.



கரூர் வடிவேல் நகரில் உள்ள கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட செயலாளர் பகவான் பரமேஸ்வரன், இணை செயலாளர் சிவா, மாவட்ட துணை செயலாளர்கள் கீதம் சி.ரவி, டி.கே.லோகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.பாலகுமார், குபேரன் ரமேஷ், டி.சி.மதன், எஸ்.கோபி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர்.

சி.ஆனந்தகுமார்